அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சர்வமதப்பேரவையின் ஏற்பாட்டில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக சர்வமதப் பிரார்த்தனை-படங்கள்



உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காகவும், நாட்டில் சமாதான சூழ் நிலை ஏற்பட வேண்டியும் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை 02-05-2019 ) மாலை 4.30 மணியளவில் சர்வ மதப்பிரார்த்தனை இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் குறித்த சர்வ மத பிரார்த்தனை இடம் பெற்றது.

இதன் போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் குணமடையவும், இந்த நாட்டில் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்படவும் சர்வமதப்பிரார்த்தனைகள் இடம் பெற்றது.

ஒரு நிமிடம் மௌன அஞ்சலியின் பின் தீபம் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 










மன்னார் சர்வமதப்பேரவையின் ஏற்பாட்டில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக சர்வமதப் பிரார்த்தனை-படங்கள் Reviewed by Author on May 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.