மன்னார் தரவன்கோட்டை கிராமத்தில் சட்டவிரோத மணல் அகழ்வால் பாதிப்பு-
மன்னார் நகரை அண்டிய கிராமமாகிய தரவன்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்யப்படுவதால் அக் கிராமம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப் பகுதி மக்கள் கவலை அடைகின்றனர். அத்துடன் அவற்றை தடுத்து நிறுத்த முற்படும்போது கொலை பயமுறுத்தலும் விடுவதாகவும் முறையீடும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நகர சபைக்கு உட்பட்ட மன்னார் நகருக்கு அண்டிய கிராமமாகிய
தரவன்கோட்டை கிராம பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்யப்படுவதால் அவ் கிராமம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அக் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதாவது கடலோரத்துக்கு அண்டிய ஒரு கிராமமாக இது இருப்பதால் மழை
வெள்ளத்துக்கு மாத்திரம் அல்ல கடல் நீராலும் இவ் கிராமம் எதிர்காலத்தில்
அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என இவ் கிராம மக்கள் அச்சம்
கொள்ளுகின்றனர்.
இது விடயமாக மன்னார் நகர சபைகளின் தலைவர் மற்றும் இதன் உறுப்பினர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதுடன் சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்வோரை தடுத்து நிறுத்த முற்படும்போது சட்டவிரோத செயல்பாட்டில் உள்ளோர் கொலை அச்சுறுத்தல் விடுவதாகவும் நகர சபை தலைவரின் கவனத்துக்கும்
இவ் கிராம மக்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் நகரப் பிதா அன்ரன் டேவிசன், நகர சபை உறுப்பினர்கள் மைக்கல்
கொலின், சந்துரு ஐங்கர சர்மா ஆகியோர் சம்பவ இடத்தையும்
பார்வையிட்டுள்ளனர்.

Reviewed by Author
on
May 10, 2019
Rating:

No comments:
Post a Comment