கொழும்பு கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் -
மூடப்பட்டுள்ள கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்தில் கொண்டு மட்டுமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால் வெசாக் பௌர்ணமி தினம் வரை கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் தினம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஆராதனைகள் நிறுத்தப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஆராதனைகள் நடத்தப்படும்.
ஏனைய மாகாணங்களில் காணப்படும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை ஆராய்ந்து மீண்டும் ஆராதனைகள் ஆரம்பிக்கப்படும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு உள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தின் வெளியரங்கில் இன்று விசேட திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெறும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் -
Reviewed by Author
on
May 09, 2019
Rating:

No comments:
Post a Comment