முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றி பேசவிருக்கும் முக்கிய சாட்சியங்கள்! -
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், குறைந்தபட்சம் சுமார் 70,000 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐநா அறிக்கை வெளியிட்டிருந்தது.
இலங்கை அரசு தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய இந்த தாக்குதல் சம்பவமே மானிட வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை என கருதப்படுகிறது.
இதற்கு நீதி வேண்டி உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இறுதிக்கட்ட போரின் போது, படுகாயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டி.வரதராஜா மற்றும் அரசாங்க மருந்தளரான கந்தசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) நடைபெறும் இந்த சந்திப்பில் இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் குறித்து இருவரும் பேச உள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பானது ஒட்டோவாவில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றி பேசவிருக்கும் முக்கிய சாட்சியங்கள்! -
Reviewed by Author
on
May 14, 2019
Rating:
No comments:
Post a Comment