சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய இறுவெட்டுக்களுடன் மதகுரு உட்பட இருவர் கைது!
கெப்பிட்டிக்கொலாவ பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய பெருமளவு இறுவெட்டுக்களும் கைப்பறப்பட்டுள்ளன.
விசேட அதிரப்படையினர் இந்த சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரில் ஒருவர் மதகுரு எனவும் மற்றையவர் அவருக்கு உதவியாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசலில் மறைத்துவைக்கப்பட்டநிலையில் சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய 52 இறுவெட்டுக்களை விசேட அதிரப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய இறுவெட்டுக்களுடன் மதகுரு உட்பட இருவர் கைது!
Reviewed by Author
on
May 31, 2019
Rating:

No comments:
Post a Comment