அண்மைய செய்திகள்

  
-

ஐஎஸ்ஐஎஸ் க்கு எதிராக எழுதப்பட்டிருந்த சஞ்சிகை வைத்திருந்தவருக்கு விளக்க மறியல் நீடிப்பு.


ஐஎஸ் ஐஎஸ் சம்பந்தமான விடயம் ஒன்று பொறிக்கப்பட்டிருந்ததாக
தெரிவிக்கப்படும் சஞ்சிகை ஒன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற
குற்றச்சாட்டில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒருவருக்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து இவ்நபருக்கு விளக்க மறியல்.

கடந்த வாரம் மடு பிரதேசத்தில் வீடுகள் சோதனையிட்டபொழுது நபர் ஒருவரின் வீட்டில் ஐஎஸ் ஐஎஸ் சம்பந்தமாக எழுதப்பட்டிருந்த சஞ்சிகை ஒன்று இருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு மடு பொலிசாரால் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 இவ் வழக்கு நேற்று வியாழக் கிழமை (30.05.2019) மன்னார் மாவட்ட நீதவான்
நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது
சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் இவ்சந்தேக நபர்
முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

-அப்பொழுது சந்தேக நபர் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரனிகள் மன்றில்
தெரிவிக்கையில்  கைப்பற்றப்பட்ட சஞ்சிகையானது அரபு மொழியிலும் தமிழிலும் எழுதப்பட்டிருப்பதாகவும் இவ் சஞ்சிகையை நீதிமன்றம் திறந்து பார்வையிட வேண்டும் எனவும் சந்தேக நபர்கள் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து இவ் சஞ்சிகையானது தமிழிலும் அரபு மொழியிலும்
எழுதப்பட்டிருந்தபோதும் இது ஐஎஸ் ஐஎஸ் க்கு எதிராகவே
எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

பயங்கரவாத சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படடிருந்த இவ் வழக்கை
மறுபரீசீலனை செய்து சாதாரண குற்றச்சாட்டு சட்டத்தின் கீழ் இவ் வழக்கை
தாக்கல் செய்யும்படி சட்டத்தரணிகள் நீதிபதியிடம் விண்ணப்பித்தனர்.

அப்பொழுது பொலிசார் மன்றில் தெரிவிக்கையில் இவ் நபருக்கு இவ் புத்தகத்தை வழங்கியவர் கெக்கிராவ பொலிசாரால் கைது செய்யப்படடிருக்கின்றார் என தெரிவித்தனர்.

அப்பொழுது சட்டத்தரணிகள் இவ் சஞ்சிகை ஐஎஸ் ஐஎஸ் க்கு எதிராகவே
எழுதப்பட்டிருப்பது தெளிவாக இருப்பதால் கெக்கிராவில் கைது
செய்யப்பட்டவரும் விடுவிக்கப்பட வேண்டியவராக இருப்பதாக இங்கு மன்றில் சுட்டிக்காட்டினர்.

இவ் வழக்கு பயங்கரவாத சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இவ்
நீதிமன்றம் பிணை வழங்க முடியாத நிலை காணப்படுவதால் பொலிசார் இவ் குற்றப் பத்திரிகையை மறு பரீசீலனை செய்து அடுத்த தவணையின்போது அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்து இவ் வழக்கை எதிர்வரும் 04.06.2019 வரை ஒத்திவைத்துள்ளார்.

இவ் சந்தேக நபர் சார்பாக சிரேஷ;ட சட்டத்தரணிகளான உனைஸ் பாரூக்,
எம்.ஏ.எம்.முபாரக் இன்னும் ஓரிரு சட்டத்தரணிகளும் மன்றில்
ஆஐராகியிருந்தனர்.

ஐஎஸ்ஐஎஸ் க்கு எதிராக எழுதப்பட்டிருந்த சஞ்சிகை வைத்திருந்தவருக்கு விளக்க மறியல் நீடிப்பு. Reviewed by Author on May 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.