அண்மைய செய்திகள்

recent
-

இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறனுமா?


பெரும்பாலும் சிலர் இரவில் தூக்கம் வரமால் கஷ்டப்படுவதுண்டு.
ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.
தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவுக்குத் தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது என்று சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமின்றி சிலர் தூக்க மாத்திரைகளை அவர்களாகவே மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த மாத்திரையின் பக்கவிளைவால் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
இதிலிருந்து எளிதில் விடுபட்டு இரவில் ஆழ்ந்த துக்கத்தினை பெற கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை எடுத்து கொண்டே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • பாதாமில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது நல்ல தூக்கத்தைப் பெறவும், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யவும் உதவும். இரவில் தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் 2-3 பாதாம் பருப்புகளை சாப்பிடுங்கள்.
  • பால் பொருட்களான சீஸ், பால் மற்றும் தயிர் போன்றவற்றில் தூக்கத்தை தூண்டும் ட்ரிப்டோபேன் உள்ளது. எனவே இதனை இரவில் சாப்பிட்டால், நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
  • முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். மேலும் உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் இருந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
  • சமீபதானியங்களில் சர்க்கரை குறைவாக இருப்பதால், இவை தூக்கத்தை தூண்டும். அதிலும் தானியங்கள் கொண்டு செய்யப்படும் செரில்களை தயிர் சேர்த்து சாப்பிட்டால், மூளையில் செரடோனின் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
  • இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு செர்ரிப் பழங்களை சாப்பிட்டால், இரவில் இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெறலாம். ஏனெனில் செர்ரிப் பழங்களில் செரரோனின் உற்பத்தியை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடலாம்.
  • இரவில் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டால், நல்ல தூக்கத்தைப் பெற முடியும். அதிலும் பாலுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், இன்னும் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.
இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறனுமா? Reviewed by Author on May 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.