அண்மைய செய்திகள்

recent
-

ரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை! -பிரதமர்


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் இரண்டு வாரத்திற்குள் அறிக்கையொன்று பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்தோடு நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நேற்று (சனிக்கிழமை) அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் கோரியமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டு வாரத்திற்குள் அறிக்கையொன்று பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பான சகல தரப்பினருக்கும் விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள். என்றும் இவர்கள் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரானவர்களே என தெரிவித்துள்ளார்.

அத்தோடு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குததல் குறித்து, தேடியறிவதற்கென நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

ரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை! -பிரதமர் Reviewed by Author on May 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.