தென்கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம்.
தமிழ் படங்களுக்கான வரவேற்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ் படங்கள் உலக அளவில் வெளியாகி பட்ஜெட்டின் ஒரு பகுதி உலக அளவில் கிடைத்துவிடுகிறது.
அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மட்டும் வெளியாகிக் கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் முதன்முறையாக தமிழ் படம் ஒன்று தென்கொரியாவில் வெளியாகவுள்ளது. அந்த பெருமையை சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படம் பெற்றுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தென்கொரியாவில் உள்ள தமிழ் சினிமா இரசிகர்கள் முதன்முறையாக படம் வெளியாகும் தினத்தன்றே பார்க்கவுள்ளனர். இந்த படம் வரும் 31ஆம் திகதி வெளியாகவுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது.
தென்கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம்.
Reviewed by Author
on
May 26, 2019
Rating:

No comments:
Post a Comment