தமிழர்களை புறக்கணித்து வட மாநிலத்தினருக்கு வேலையா? கொந்தளித்த ஸ்டாலின்! -
பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெற நடைபெற்ற தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலத்தவருக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுதொடர்பாக தனது கண்டனத்தை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,
‘தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் கொடுஞ்செயல், மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு பல மடங்கு பெருகி விட்டது வேதனை அளிக்கிறது.
அண்மையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெற நடைபெற்ற தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டார்கள்.
கோவை, சென்னை உள்ளிட்ட ரயில்வே அலுவலகங்களிலும் இந்த அநீதி தமிழக இளைஞர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் வேலையில்லாத திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், புதிய பணியிடங்கள் எல்லாம் வட மாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டது போன்ற அவல நிலைமையை பா.ஜ.க அரசு திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை சென்று, தமிழக இளைஞர்களை வஞ்சித்திருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.
தமிழர்களை புறக்கணித்து வட மாநிலத்தினருக்கு வேலையா? கொந்தளித்த ஸ்டாலின்! -
Reviewed by Author
on
May 07, 2019
Rating:

No comments:
Post a Comment