ஜனாதிபதி மைத்திரியின் கையெழுத்துடன் வெளியானது வர்த்தமானி! -
பொது இடங்களில் முகத்தை மறைப்பதற்கு தடைவிதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5ம் பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏதாவது ஆடை, உடுப்பு அல்லது துணிகள், ஒருவரை அடையாளம் காண ஏதேனும் வகையில் சிரமமாக்கும் வகையில், முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் அணியப்படல் ஆகாது.
இவ்வாறு அணிபவர்கள், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் அல்லது சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர் உத்தரவுக்கமைய, ஒருவரை அடையாளம் காண, காதுகள் உட்பட முழு முகத்தை மறைக்கும் எந்த ஒன்றினையும் அகற்ற வேண்டி நேரிடும்.
இங்கு முழு முகம் என குறிப்பிடப்படுவது, நெற்றியில் இருந்து வாய்க்கு கீழுள்ள நாடி வரைஎன்பதாகும். இங்கு காதுகள் உள்ளடங்காது எனவும் குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தக்குதல்களுடன் தொடர்புடைய அமைப்பாக கருதப்படும் தேசிய தெளஹீத் ஜமாத் உள்ளிட்ட மூன்று அமைப்புக்களை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரியின் கையெழுத்துடன் வெளியானது வர்த்தமானி! -
Reviewed by Author
on
May 15, 2019
Rating:

No comments:
Post a Comment