மன்னார் சதொச மனித புதைகுழி தடயப் பொருட்களை ஆய்வு-இடை நிறுத்தப்பட்டுள்ளது
மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருட்களை
ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக களனி பல்கலைக் கழக பேராசிரியரிடம்
கையளிக்கப்பட இருந்த வேளையில் இவ் புதைக்குழிக்கு பொறுப்பாயிருந்த சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்கு இணங்க இவ் கையளிக்கும் நிகழ்வு பிரிதொரு திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது.
மன்னார் நகர் பகுதியில் கடந்த வருடம் சதொச விற்பனை நிலையத்துக்கான
கட்டுமானப்பணி நடைபெற்றபொழுது கடந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில்
அப்பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு எச்சங்களும் தடயப்
பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டன..
இவ் மன்னார் சதொச புதை குழி வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 13 ந் திகதி
களனி பல்கலைக் கழக பேராசிரியர் ராஐ; சோமதேவா அவர்களின் கோரிக்கைக்கு அமைய மன்னார் பொலிசாரின் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் மன்னார் மாவட்ட நீதவான் நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய வியாழக் கிழமை 27-06-2019 மனித எச்சங்கள் அல்லாத ஏனைய இவ் புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பொலிசாரின் உதவியுடன் களனி பல்கலைக் கழக பேராசிரியர் ராஐசோமதேவாவிடம் கையளிக்கும்படி நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி
மாணிக்கவாசகர் கணேசராஐh முன்னிலையில் இவ் வழக்கு எடுக்கப்பட்டு
அவர்களின் விண்ணப்பமும் இதில் பங்குபற்றுபவர்களின் பெயர்களும்
பதியப்பட்டு நீதிமன்றில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இருபது
பெட்டிகளில் வைக்கப்படடிருந்த பொருட்கள் வியாழக் கிழமை
27-06-2019 வெளி எடுக்கப்பட்டு மனித எச்சங்கள் பிறம்பாகவும் தடயப் பொருட்கள் பிறம்பாகவும் இருபது பெட்டிகளிலிருந்து பிரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்றைய முன்தினம் வியாழக் கிழமை ஒரு சில பெட்டிகளில்
பிரித்தெடுக்கப்பட்ட தடயப் பொருட்கள் ஒரு பெட்டியில் இடப்பட்டது.
அத்துடன் ஏனைய பெட்டிகளிலுள்ள தடையப் பொருட்களை நேற்று வெள்ளிக் கிழமை 28-06-2019 பிரித்தெடுப்பது என்ற முடிவோடு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு அன்று அழைக்கப்பட இருந்தது.
அப்பொழுது இவ் புதைகுழி அகழ்வுப் பணிக்கு பொறுப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் ராஐபக் ஷ அவ்விடத்தில் தான் நீதிமன்றில் ஒரு கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த பொருட்கள் தரம் பிரிப்பின்போது தமக்கு சட்ட அனுசரனை ஒன்று தேவை என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் சட்ட மா அதிபர்
அலுவலகத்திலிருந்து அரச சட்டத்தரணி ஒருவரை இவ் தடயப் பொருட்களை தரம் பிரித்து அனுப்புவதற்கான ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்று இவ் வழக்கை மீண்டும்
செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி அழைப்பது என தவணையிட்டுள்ளது.
இவ் வழக்கின்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் ஆஐராகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
June 29, 2019
Rating:

No comments:
Post a Comment