மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள 20 மில்லியன் ரோபோக்கள் -
செலவினை மீதப்படுத்துதல், உற்பத்தி திறனை விரைவுபடுத்தல் போன்றவற்றிற்காக இவ்வாறு ரோபோக்கள் பிரதியீடு செய்யப்படுகின்றன.
இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் ரோபோக்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 20 மில்லியனை எட்டியிருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oxford Economics நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மனித வேலையிழப்புக்கள் வெகுவாக அதிகரிக்கும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ரோபோக்களின் பயன்பாடு தொடர்பான பகுப்பாய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் சீனா அசுர வளர்ச்சி காட்டியுள்ளது. அதாவது அமெரிக்காவினை விடவும் அதிக அளவில் ரோபோக்கள் பயன்படுத்தும் நாடாக சீனா விளங்குகின்றது.
மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள 20 மில்லியன் ரோபோக்கள் -
Reviewed by Author
on
June 30, 2019
Rating:

No comments:
Post a Comment