ஹீரோவாக இனி நடிக்க மாட்டேன்! தர்மபிரபு படத்தை பார்த்த பிறகு திட்டவட்டமாக அறிவித்த யோகிபாபு
ஹீரோக்களுடன் காமெடியானாக படம் முழுவதும் வலம் வந்த யோகிபாபு முழு ஹீரோவாக நடித்த படம் தர்மபிரபு.
நேற்று வெளியான இப்படத்தை பற்றி இதுவரை நல்ல விமர்சனங்களே வெளிவந்துள்ளன. இப்படத்தை ரசிகர்களுடன் தியேட்டர் ஒன்றில் பார்த்த யோகிபாபு வெளியே வந்தவுடன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
மேலும், இனி வழக்கம்போல் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடி மட்டும் தான் செய்வேன். இரண்டு நண்பர்களுக்காக தான் கதையில் ஹீரோவாக நடித்தேன். இனி ஹீரோவாக நடிக்க போவதில்லை எனவும் கூறினார்.
ஹீரோவாக இனி நடிக்க மாட்டேன்! தர்மபிரபு படத்தை பார்த்த பிறகு திட்டவட்டமாக அறிவித்த யோகிபாபு
Reviewed by Author
on
June 30, 2019
Rating:

No comments:
Post a Comment