நான்கு மனைவிகள்; 28 பிள்ளைகள்; நிரந்தரமாய் ஒரு வேலையில்லை! பொலிஸாரை மலைக்கவைத்த மௌலவி!!
சிறிலங்காவின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்ட மௌலவி ஒருவர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியிலுள்ள போரதோட்டையில் வசிக்கும் குறித்த நபர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பை ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் குறித்த பை பொலிஸாரால் ஆராயப்பட்டபோது அதனுள்ளிருந்து குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த நபர் சீ.சீ.டி.வியின் உதவியுடன் இனங்காணப்பட்டு பொலிஸாரால் கைதுசெய்யபட்டார்.
அவரிடம் விசாரணையினை மேற்கொண்ட பொலிஸார் அவர் கூறிய தகவல்களைக் கேட்டு மலைப்படைந்து ள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த அவர் ஒரு நிரந்தர வேலை இல்லாதவர் என்பது தெரியவந்தது.
இதுமட்டுமன்றி அவருக்கு நான்கு மனைவியரும் 28 பிள்ளைகளும் உள்ளமை தெரியவந்ததால் விசாரணை செய்த பொலிஸார் வியப்படைந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் மீதான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்வதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
நான்கு மனைவிகள்; 28 பிள்ளைகள்; நிரந்தரமாய் ஒரு வேலையில்லை! பொலிஸாரை மலைக்கவைத்த மௌலவி!!
Reviewed by Author
on
June 15, 2019
Rating:

No comments:
Post a Comment