நான் இதை செய்தால் என் ரசிகர்களும் செய்வார்கள், அஜித் எடுத்த முடிவு
அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் விரைவில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் அஜித் விவேகம் படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்தார்.
அதை பார்த்த ரசிகர்கள் செம்ம சந்தோஷம் ஆனார்கள், ஆனால், அஜித்திற்கு பயிற்சி கொடுத்தவர் இதுக்குறித்து கூறுகையில் ‘நானே பலமுறை இதெல்லாம் வேண்டாம் சார் என்றேன்.
ஏனெனில் அவருடைய உடலில் மிகப்பெரிய ஆப்ரேஷன் நடந்துள்ளது, அதனால் தவிர்த்தேன், ஆனால், அஜித் “சார் பண்ணனும் சார், நான் இதை செய்தால், என் ரசிகர்களும் செய்வார்கள், அவர்களுக்கு பிட்நஸ் குறித்த விழிப்புணர்வு வரும்” என கூறினார்’ என தெரிவித்துள்ளார்.
நான் இதை செய்தால் என் ரசிகர்களும் செய்வார்கள், அஜித் எடுத்த முடிவு
Reviewed by Author
on
June 27, 2019
Rating:

No comments:
Post a Comment