ஈரானை அழித்துவிடுவேன்..! நான் ஒபாமா இல்லை: அச்சுறுத்திய டிரம்ப் -
அமெரிக்காவின் புதிய பொருளாதார தடையை விமர்சித்த ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, வெள்ளை மாளிகைக்கு மனநலம் குன்றிவிட்டது என அவமானப்படுத்தினார்.
இதற்கு அமெரிக்கா ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது, உலகத்திலேயே மிகவும் வலிமையான இராணுவத்தை கொண்டது அமெரிக்கா.
எந்த காரணமும் இல்லாமல், அற்புதமான ஈரானிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்களின் தலைமை அதன் பணத்தை முழுவதுமாக பயங்கரவாதத்திற்காக செலவிடுகிறது, ஈரான், IED & EFP’s குண்டுகளை பயன்படுத்தி 2000 அமெரிக்கர்களைக் கொன்றது, மேலும் பலரைக் காயப்படுத்தியதை அமெரிக்கா மறக்கவில்லை.
ஈரானின் அறியாமை மற்றும் அவமதிக்கும் அறிக்கை, இன்று வெளியிடப்பட்டிருப்பது, அவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதை மட்டுமே காட்டுகிறது. அமெரிக்கர்கள் மீது ஈரானின் எந்தவொரு தாக்குதல் நடத்தினாலும், மாபெரும் சக்தியை சந்திக்கும். ஈரானில் சில பகுதிகளில் அழிக்கப்படும். நான் ஜான் கெர்ரியோ, ஒபாமாவோ இல்லை என எச்சரித்துள்ளார்.
ஈரானை அழித்துவிடுவேன்..! நான் ஒபாமா இல்லை: அச்சுறுத்திய டிரம்ப் -
Reviewed by Author
on
June 27, 2019
Rating:

No comments:
Post a Comment