முஸ்லிம் சமூகத்துடன் எவ்வித குரோதமும் கிடையாது: அஸ்கிரி பீடாதிபதி -
முஸ்லிம் சமூகத்துடன் எவ்வித குரோதமும் கிடையாது என அஸ்கிரி பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், அண்மையில் தாம் வெளியிட்டிருந்த ஒரு கருத்து திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் சமூகம் பற்றி தாம் வெளியிட்ட கருத்து அனைவரினதும் பேசுபொருளாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி பலம்பொருந்திய கட்சி எனவும், பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து மக்களின் நன்மதிப்பை ஈட்டிய கட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அண்மைக் காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சில முஸ்லிம் கடும்போக்குவாதிகளினால் ஏனைய முஸ்லிம் சமூகத்தினருக்கு பெரும் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தனர் எனவும் அதே நிலைமை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்துடன் எவ்வித குரோதமும் கிடையாது: அஸ்கிரி பீடாதிபதி -
Reviewed by Author
on
June 22, 2019
Rating:

No comments:
Post a Comment