இலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன் -
தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்து வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் திடீர் வெற்றியால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை அணியின் வெற்றியினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அம்பாறை, தமன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான ரத்நாயக்க முதியன்செலாகே கயான் மதுஷங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்து - இலங்கை அணிக்கான போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய இளைஞன் 5 பந்துகளில் 5 , 6 ஓட்டங்களை பெற்ற மகிழ்ச்சியுடன் வீடு சென்றுள்ளார்.
வீடு சென்றவர் தொலைகாட்சியில் இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார்.
போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றவுடன், குறித்த இளைஞன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியல் அவர் உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட்டை உயிர் போன்று நேசித்த இளைஞக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியின் வெற்றியால் ஏற்பட்ட அதீத சந்தோசமாக உயிரிழப்புக்கு காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன் -
Reviewed by Author
on
June 27, 2019
Rating:

No comments:
Post a Comment