சுவாமி விபுலாநந்தரின் ஞாபகார்த்த மண்டபம் திறந்து வைப்பு -
பழமை குன்றாது நவீனமாக புனரமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் அவதரித்த பூர்வீக வாசஸ்தலமும், சுவாமி பிறந்த இல்லத்தின் முன் நிறுவப்பட்டுள்ள இருக்கை நிலையிலுள்ள சுவாமி விபுலாநந்தரின் சிலையும் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதென இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மனோகணேசன் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களை திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் இந்த இரண்டு மண்டபங்களும் பொதுமக்கள் பாவனைக்காகவும், பார்வையிடலுக்காகவும் மீளக் கையளிக்கும் வகையிலான ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையத்தின் அம்பாறை மாவட்டக் கிளையினை ஆரம்பித்து வைத்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சுவாமி விபுலாநந்தரின் ஞாபகார்த்த மண்டபம் திறந்து வைப்பு -
Reviewed by Author
on
June 27, 2019
Rating:

No comments:
Post a Comment