உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை.. தமிழகத்தில் அமைகிறது! -
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பத்துமலை குகைக் கோயிலின் நுழைவு வாயிலில், உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.
சுமார் 140 அடி உயரத்தில் இந்த சிலை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை மிஞ்சும் அளவிற்கு 146 அடி உயரத்தில், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் தான் மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆத்தூரைச் சேர்ந்த தொழிலதிபரும், தீவிர முருக பக்தருமான ஸ்ரீதர் என்பவர் தான் இந்த சிலையை அமைப்பதற்கு நிதியளித்துள்ளார். அத்துடன் இவருக்கு சொந்தமான நிலத்தில் தான் முருகன் சிலையை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சிலையின் அருகே ஏழை மக்களுக்கு அன்னதான திட்டத்தை செயல்படுத்த, பெரிய மணி மண்டபம் கட்டவும் போவதாக ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
146 அடி உயரத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்ட முருகன் சிலை உலக வரைபடத்திலும் முக்கிய இடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை.. தமிழகத்தில் அமைகிறது! -
Reviewed by Author
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment