90 வீதமானவர்களுக்கு தகுதியில்லை! அரசியல்வாதிகளை மோசமாக விமர்சித்துள்ள மைத்திரி -
வாக்குகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு நாட்டைப்பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி நிவித்திகலை சுமன மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் போதைப் பொருள் பாவனையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. வாக்குகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு நாட்டைப்பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை.
நாட்டில் நூற்றுக்கு பத்து வீதமான அரசியல்வாதிகள் மாத்திரமே அரசியலுக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். எஞ்சிய தகுதியற்ற அரசியல்வாதிகளே அதிகமாக தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தீய வழியில் செல்கின்றனர்.
அரச அதிகாரிகளிலும் நூற்றுக்கு 10 வீதமானவர்களே ஒழுக்கமானவர்களாக உள்ளனர் என்றார்.
90 வீதமானவர்களுக்கு தகுதியில்லை! அரசியல்வாதிகளை மோசமாக விமர்சித்துள்ள மைத்திரி -
Reviewed by Author
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment