போரை தூண்டுவதே அமெரிக்கா தான்: ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது ரஷ்யா -
ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரம் சூழ்நிலையில் 1,000 வீரர்களை கூடுதலாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா.
இதுகுறித்து ரஷ்ய துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியதாவது, ஈரானுடன் மோதலைத் தூண்டும் நோக்கத்துடன் தான், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் போரைத் தூண்டுவதற்கான ஒரு திட்டமிட்ட போக்கே தவிற, வேறுவிதமாகக் இதை காண முடியாது.
அமெரிக்கா தனது படைகளை மேலும் வலுப்படுத்துவதின் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தனது நட்பு நாடுகளை ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிப்பதில் இழுத்துச் செல்கிறது. மேலும், பிற நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டி இருக்கிறது என ரியாப்கோவ் கூறியுள்ளார்.
பதற்றத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என ரஷ்ய துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வலியுறுத்தியுள்ளார்.
போரை தூண்டுவதே அமெரிக்கா தான்: ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது ரஷ்யா -
Reviewed by Author
on
June 20, 2019
Rating:

No comments:
Post a Comment