உங்க தலையில் பேன் தொல்லை அதிகமா இருக்கா? -
இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன. பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில வழிமுறைகள் உள்ளன.
தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

- கருந்துளசியை படுக்கும் தலையணையில் பரப்பி விட்டு, அதன் மேல் ஒரு வெள்ளைத் துணியை விரித்து, தூங்க வேண்டும். இதனால் தலையில் இருக்கும் பேன்கள் அதன் வாசத்திற்கு தலையில் இருந்து வெளியேறிவிடும்.
- வில்வக்காயை நன்கு காய வைத்து பொடி செய்து, அதனை சீயக்காய் பொடியுடன் சிறிது கலந்து, தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் தலையில் பொடுகும் பேனும் போவதோடு, கண்ணுக்கு மிகவும் நல்லது.
- தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து, தலையில் தேய்த்து ஊற வைத்து, குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்து விடும்.
- கூந்தலை அலசும் போது, தலைக்கு சீயக்காய் மற்றும் புளித்த தயிரை சேர்த்து, அதனை தலைக்கு தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, பின்பு கூந்தலை அலச வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்குவதோடு, கூந்தலும் மென்மையாகும்.
- நன்கு புளித்த தயிரை தலைக்கு தடவி, அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு கூந்தலை அலசினால், தலையில் இருக்கும் பேன் மற்றும் பொடுகு போய்விடும்.
- மருதாணி விதை,சிறிது வெந்தயம் மற்றும் வசம்பு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு , காய வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், பேன் மற்றும் பொடுகுத் தொல்லை நீங்கும்.
உங்க தலையில் பேன் தொல்லை அதிகமா இருக்கா? -
Reviewed by Author
on
June 22, 2019
Rating:
No comments:
Post a Comment