முசலி கல்லாறு ஹீனைஸ் நகர் பகுதியில் வீட்டுத்திட்டம் இராணுவத்தினால் இடை நிறுத்தப்பட்ட காணிகள் அனைத்தும் அரச காணி- சி.ஏ.மோகன்றாஸ்-
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லாறு ஹீனைஸ் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் இராணுவம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியவற்றினால் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த வீடுகள் அமைக்கப்பட்டு வரும் காணியானது அரச காணி என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பிலும், வீட்டுத்திட்டம் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை (3) காலை 9.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,,,
வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ அவர்கள் முசலி வீட்டுத்திட்டம் தொடர்பில் என்னுடன் உரையாடியுள்ளார். என்னுடைய அமைச்சின் அனுமதியை பெற்று குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்ளுகின்றேன்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் ஹீனை நகர் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தில் 87 வீடுகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
குறித்த வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.87 வீடுகள் அமைப்பதற்கான காணிகளில் 65 வீடுகளுக்கான காணிகளுக்கான அனுமதிப்பத்திரமும் (போமீட்) வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 22 வீடுகளுக்கான அனுமதிப்பத்திரமும் இருக்கின்றது.குறித்த காணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது.
வன வளத்திணைக்களத்திற்கு சொந்தமான எக்காணியும் அப்பகுதியில் இல்லை. குறித்த அரச காணியிலே குறித்த வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலே குறித்த வீட்டுத்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன் என தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன்,,,,
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட பணி இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக எமது தொழில் நுற்ப உத்தியோகஸ்தரினூடாக எனக்கு அறியக்கிடைத்தது.
-உடனடியாக இவ்விடையம் தொடர்பில் மைச்சர் சஜீத் பிரேமதாஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
உடனடியாக அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் கதைத்து விடையத்தை அறியத்தந்ததோடு, மீண்டும் வீட்டுத்திட்ட பணிகளை அரம்பிக்க சகல அனுமதியும் வழங்கப்பட்டது.நான் மன்னார் மாவட்ட இராணுவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கதைத்த போது குறித்த வீட்டுத்திட்டத்தை தடுத்து நிறுத்தியதற்கான காரணத்தை தெரிவித்தார்.
குறிப்பாக முசலி பிரதேசத்தில் பல வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் இன்றி காணப்படுகின்றது.அதன் காரணமாகவே இத்திட்டத்தை இடை நிறுத்தியதாக தெரிவித்தார்.
மீண்டும் இராணுவம் அனுமதி வழங்கியதோடு,முசலி பிரதேசச் செயலாளருடன் இவ்விடையம் தொடர்பில் கலந்துரையாடிய போது குறித்த காணி அரச காணி.முசலி பிரதேசச் செயலகத்தினால் வழங்கிய காணியில் தொடர்ந்தும் வீட்டுத்திட்ட பணிகளை முன்னெடுக்குமாறு கூறினார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,,,,
-முசலி பிரதேசத்தில் 87 பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டு பயணாயளிகளின் தெரிவு பட்டியல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
-உறுதிப்படுத்தப்பட்ட அரச காணிகளிலேயே குறித்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கினோம். அதன் அடிப்படையிலே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் இடம் பெற்று வந்தது.
எனினும் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் இராணுவத்தினரால் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பயணாளிகளினால் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. சில ஊடகங்களிலும் செய்திகள் வெளி வந்துள்ளது. இந்த நிலையில் உடனடியாக குறித்த பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டேன். பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளருடன் கலந்துரையாடிய போது குறித்த வீட்டுத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தமக்கு அனமதி கிடைத்துள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் அடை நிறுத்தப்பட்டுள்ளதாக நான் அறிந்தேன்.அதன் பின்னர் எவ்வித அறிவித்தலும் எமக்கு கிடைக்கவில்லை.
மேலும் முசலியில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வீட்டுத்திட்டங்களின் போது பல்வேறு வீடுகள் மக்களின் குடியிறுப்பு இன்றி காணப்படுகின்றது.கிராம சேவையாளர் ஊடாக மக்கள் இல்லாத வீடுகளின் விபரங்களை பெற்றுள்ளோம்.மக்களுக்கான அறிவித்தல்களும் வழங்கியுள்ளோம்.
இராணுவத்தினருடனும் இவ்விடையம் தொடர்பில் கலந்துரையாடி உள்ளோம்.மக்கள் இல்லாத வீடுகளில் மக்களை வந்து குடியமர இரண்டு வார கால அவகாசம் வழங்கவுள்ளதாகவும்,குறித்த காலத்தினுள் வந்த குடியமராது விட்டால் குறித்த வீடுகளை பறிமுதல் செய்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முசலி கல்லாறு ஹீனைஸ் நகர் பகுதியில் வீட்டுத்திட்டம் இராணுவத்தினால் இடை நிறுத்தப்பட்ட காணிகள் அனைத்தும் அரச காணி- சி.ஏ.மோகன்றாஸ்-
Reviewed by Author
on
June 03, 2019
Rating:
No comments:
Post a Comment