மூடிய அறைக்குள் மந்திராலோசனை! கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி -
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசசெயலகமாக இயங்க வைக்க இன்று முடிவெடுக்கப்பட்டது.
பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று நடத்திய உயர்மட்ட சந்திப்புக்களையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவும் உடன் இருந்தார்.
அடுத்த இரண்டு மாதத்திற்குள் அனைத்து நிர்வாக, சட்டரீதியான பணிகளையும் முடித்து, கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் இயங்க ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு காணப்பட்டது.
இதன்போது, கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த கூட்டமைப்பு வலியுறுத்தியது. பிரதமர் அதை ஏற்றுக்கொண்டார்.
முஸ்லிம் காங்கிரசுடனும் பேசி ஒரு முடிவை உடனே எடுக்கலாமென கூறி, அடுத்த சந்திப்பு இடம்பெற்றது.
பிரதமர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மூடிய அறைக்குள் நடத்திய மந்திராலோசனையின் பின் கல்முனையை தரமுயர்த்துவதென உடன் முடிவாகியது.
இதற்கான முதற்கட்ட அறிவிப்பை இன்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய சந்திப்பில் இரா.சம்மந்தன், மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன், சிறிநேசன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சீ.யோகேஸ்வரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, கோடீஸ்வரன் உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த இரண்டு மாதங்களிற்குள் கல்முனை முழுமையான- தனியான பிரதேசசெயலகமாக இயங்க ஆரம்பிக்கும் என கூறப்பட்டது. கடந்த காலங்களில் இப்படியான பல முடிவுகள் அறிவிக்கப்பட்டிருநதது இன்று முப்பது வரடங்களை கடந்துள்ளது.
இந்த இரண்டு மாதங்களும் இரண்டு மாதங்களுடன் முடிவடையுமா அல்லது அதனை கடந்து விடுமா என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மூடிய அறைக்குள் மந்திராலோசனை! கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி -
Reviewed by Author
on
June 21, 2019
Rating:

No comments:
Post a Comment