அண்மைய செய்திகள்

recent
-

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாக மடு திருத்தலத்தில் அவசர கலந்துரையாடல்-படம்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், திரு விழாவுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல்   இன்று வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை,கிறிஸ்தவ கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் சத்தூரி பின்ஜோ, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை  அடிகளார் , குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது எதிர்வரும் 2 ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

-இதன் போது திருவிழா தினத்தன்று 300 பொலிஸார்,25 விசேட அதிரடிப்படையினர்,60 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மேலும் குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

எதிர் வரும் 2 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை மற்றும் கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் அன்ரனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்லியாக ஒப்புக்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாக மடு திருத்தலத்தில் அவசர கலந்துரையாடல்-படம் Reviewed by Author on June 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.