மன்னார்-பராமரிப்பு அற்ற தொலை தொடர்பு கம்பங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை...
மன்னார் பிரதேச் சபைக்கு உட்பட்ட மன்னார் பிரதான பாலப்பகுதியில் பராமரிப்பு அற்று கைவிடப்பட்ட பயன் அற்ற கம்பங்கள் மற்றும் தொலைதொடர்பு வயர்களை அகற்றுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் தள்ளாடி பகுதியில் இருந்து பிரதான பலத்தை இணைக்கும் விதியின் இரு பக்க கடல் பகுதிகளிலும் சுமார் 25 க்கு மேற்பட்ட தொலைதொடர்பு கம்பங்கள் உடைந்த நிலையிலும் முழு அளவிலும் துறுப்பிடித்த நிலையிலும் பராமரிப்பு அற்ற நிலையில் பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
பல வருடங்களுக்கு முன் பாவனையில் இருந்த குறித்த கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மற்றும் தொலைதொடர்பு கம்பங்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தொலைதொடர்பு இணைப்புகள் மாற்றப்பட்டமையினால் பழைய தொலைதொடர்பு கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு வயர்கள் அவ்வாறே கைவிடப்பட்டுள்ளன
எனவே குறித்த பகுதியில் தேவையற்று காணப்படும் தொலைதொடர்பு கம்பங்கள் மற்றும் மின் கம்பங்களை உரிய தரப்பினர் அகற்றி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் தள்ளாடி பகுதியில் இருந்து பிரதான பலத்தை இணைக்கும் விதியின் இரு பக்க கடல் பகுதிகளிலும் சுமார் 25 க்கு மேற்பட்ட தொலைதொடர்பு கம்பங்கள் உடைந்த நிலையிலும் முழு அளவிலும் துறுப்பிடித்த நிலையிலும் பராமரிப்பு அற்ற நிலையில் பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
பல வருடங்களுக்கு முன் பாவனையில் இருந்த குறித்த கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மற்றும் தொலைதொடர்பு கம்பங்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தொலைதொடர்பு இணைப்புகள் மாற்றப்பட்டமையினால் பழைய தொலைதொடர்பு கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு வயர்கள் அவ்வாறே கைவிடப்பட்டுள்ளன
எனவே குறித்த பகுதியில் தேவையற்று காணப்படும் தொலைதொடர்பு கம்பங்கள் மற்றும் மின் கம்பங்களை உரிய தரப்பினர் அகற்றி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்-பராமரிப்பு அற்ற தொலை தொடர்பு கம்பங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை...
Reviewed by Author
on
June 13, 2019
Rating:

No comments:
Post a Comment