மன்னார் மாந்தை மேற்கில் சிறுபோக வேளாண்மை காணி ஒதுக்குவதில் மதரீதியான பாகுபாடு - மா.மே. இந்து பேரவை
2019 வருடத்திற்கான சிறுபோக வேளாண்மை பொதுக்கூட்டத்தில் மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய விவசாய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்ட தீர்மானத்தின்படி பொது தேவைகளுக்கு பாடசாலை ,கோயில்,குளக்கட்டு திருத்த காணியை பயன்படுத்த வேண்டாம் என்று கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டும் கத்தோலிக்க ஆலயத்திற்கு ஒதுக்கப் படுவதற்கான காரணம் என்ன? என மாந்தை மேற்கு இந்து பேரவை வினவியுள்ள அதே நேரம்
காணி ஒதுக்கீட்டு விடயம் தொடர்பாக மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவை உரிய அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை
மாந்தை மேற்கு இந்து பேரவையின் அறிக்கை
காணி ஒதுக்கீட்டு விடயம் தொடர்பாக மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவை உரிய அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை
மாந்தை மேற்கு இந்து பேரவையின் அறிக்கை
சிறுபோக காணி தொடர்பாக
மேற்படி விடயம் தொடர்பாக மாந்தை மேற்கு பகுதிக்குள் உட்பட்ட சிறுபோக அரச காணிகளை தங்கள் சொந்த காணிகளாக்க ஒரு சில அமைப்புகள் செயற்பட்டு வருவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது.கருங்கண்டல்,வண்ணான்குளம்,காத்தான் குளம்,நெடுங்கண்டல் இப்படிப்பட்ட அரச சிறுபோக வேளாண்மை காணியில் கத்தோலிக்க சமயத்தை சார்ந்தவர் விவசாய அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒரு சில கமக்கார அமைப்புகளே பக்க சார்பாக கத்தோலிக்க ஆலயங்களுக்கு மாத்திரம் அரச காணிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.இப்படிப்பட்ட செயல்கள் அரச அதிகாரிகளின் ஆதரவூடாக நடை பெற்று வருகின்றது.இது இந்து மக்களை மிக மன வேதனைக்குள்ளாக்குகின்றது.மன்னார் மாவட்டத்தில் இந்து மக்களையும் இந்து ஆலயங்களையும் மற்றையசமயத்தினரை போல் சமமாக மதிக்கும் உரிமையை நிலை நாட்டுவீர்கள் என நம்பிக்கையோடு இந்து மக்கள் பேரவை சார்பாக தங்களின் மேலான கவனத்திற்கு அறிய தருவதோடு ஒரு பயனாளியின் பாதிக்கப்பட்ட கடிதத்தின் பிரதியையும் இணைத்து தகுந்த ஆதாரமாக தங்களுக்கு அனுப்புகின்றோம்
மன்னார் மாந்தை மேற்கில் சிறுபோக வேளாண்மை காணி ஒதுக்குவதில் மதரீதியான பாகுபாடு - மா.மே. இந்து பேரவை
Reviewed by Admin
on
June 12, 2019
Rating:

No comments:
Post a Comment