உலகிலேயே இந்த நாட்டவர்கள்தான் நேர்மையானவர்களாம்: ஆய்வின் ஆச்சரிய முடிவுகள்!
அதுவும், பணம் அதிகம் இருக்கும் பர்ஸ்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் சுவிட்சர்லாந்துக்காரர்களை மிஞ்ச ஆளே இல்லை என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக ஒருவர் அதிக தொகை இருக்கும் ஒரு பர்சைக் கண்டால் அதை மறைத்து வைத்துக் கொள்வார் என்றுதான் எண்ணத்தோன்றும், ஆனால் உண்மையில் இந்த ஆய்வு ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது குறைவான தொகை இருக்கும் பர்சைவிட, அதிக தொகை இருக்கும் பர்ஸ்களைதான் மக்கள் மிக பத்திரமாக உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரமாண்ட ஆய்வு, 40 நாடுகளில் உள்ள 355 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் சுவிட்சர்லாந்தும் நார்வேயும் நேர்மையானோர் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்க, பெரு, மொராக்கோ கடைசியாக சீனா ஆகிய நாடுகள் பட்டியலின் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
பணம் இல்லாத பர்ஸ்களை 40 சதவிகிதத்தினர் திருப்பியளித்த நிலையில், பணம் இருக்கும் பர்ஸ்களை 51 சதவிகிதத்தினர் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்திருந்தனர்.
சுமார் 600,000 டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், 17,000த்துக்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான பர்ஸ்களில் பல்வேறு முக்கியமான பொருட்கள் வைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் போடப்பட்டன.
ஆய்வில் பங்கேற்கும் ஒருவர், அந்த பர்சை எடுத்து தெருவில் கிடைத்ததாகக் கூறி அருகிலுள்ள அலுவலகம் ஒன்றில் கொடுத்து, தனக்கு நேரமாகிவிட்டதாகவும், அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கோருவார்.
சில பர்ஸ்களில் பணத்துடன் ஒரு சாவியும், சிலவற்றில் ஒரு பெருந்தொகையும் வைக்கப்பட்டிருந்தன.
சிறு தொகை வைத்திருந்த பர்ஸ்களை திருப்பிக் கொடுப்பதை விட, அதிக தொகை வைத்திருந்த பர்ஸ்களை கொடுப்பது 11 சதவிகிதம் அதிகரித்தது.
அதேபோல் சாவி வைக்கப்பட்ட பர்ஸ்களை உரியவரிடம் ஒப்படைப்பது 9.2 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
ஆனால் சுவிட்சர்லாந்து மற்றும் நார்வேயைப் பொருத்தவரை பர்ஸ்களை உரியவரிடம் ஒப்படைப்பது 70 சதவிகிதத்தை தாண்டியது.
அதற்கு நேர்மாறாக சீனாவில் 10 சதவிகிதத்திற்கும் குறைந்தவர்களே பர்சை திருப்பிக் கொடுத்திருந்தனர்.
என்றாலும் அங்கும், பர்சில் பணம் இருக்கும் பட்சத்தில் அது இரு மடங்காகி 20 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பர்சை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
உலகிலேயே இந்த நாட்டவர்கள்தான் நேர்மையானவர்களாம்: ஆய்வின் ஆச்சரிய முடிவுகள்!
Reviewed by Author
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment