வவுனியாவில் இரகசியமாக நள்ளிரவில் குடியமர்த்தப்பட்டனர் வெளிநாட்டு அகதிகள்!
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு 12 மணியளவில் 77 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக குறித்த அகதிகள் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 77 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இரகசியமாக நள்ளிரவில் குடியமர்த்தப்பட்டனர் வெளிநாட்டு அகதிகள்!
Reviewed by Author
on
June 01, 2019
Rating:

No comments:
Post a Comment