வடமாகாணம் தமிழர்களின் தாயகம்! கிழக்கு முஸ்லிம்களின் தாயகம் - பிரதி தவிசாளரின் கருத்தை சுட்டிக்காட்டும் எம்.பி -
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அட்டாளைச்சேனையின் பிரதி தவிசாளர் பேசும் போது, கல்முனையில் இருந்து ஒரு அங்குல காணியை கூட நாங்கள் விட்டு தர தயாரில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அட்டாளைச்சேனையின் தவிசாளர் பேசும் போது கூட அதே கருத்தை கூறியிருந்தார். கல்முனையிலே தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு அங்குல காணியை கூட விட்டு தர முடியாது என பேசியிருக்கிறார்கள். இதனை நாம் சுட்டிக்காட்டினால் நாம் இனவாதியாக மாறிவிடுகிறோம்.
இவ்வாறான கருத்துக்களுக்கு எந்த தமிழ் அரசியல்வாதி ஆமாம் போடுகிறாரோ அல்லது பேசாமல் இருக்கிறாரோ அந்த அரசியல்வாதி அவர்களின் பார்வையில் நல்லிணக்கவாதியாக மாறி விடுகிறார். அட்டாளைச்சேனையின் பிரதி தவிசாளர் இன்னுமொரு விடயத்தையும் கூறியுள்ளார்.
அதாவது, “யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை கொண்ட வட மாகாணம் தமிழர்களின் தாயகம்.
ஆனால் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை கொண்ட கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகம்” என அழுத்தம் திருத்தமாக பேசியிருந்தார்.
கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்குரிய மாகாணம். இது முஸ்லிம்களுக்குரிய தாயகம் எனவும் அட்டாளைச்சேனையின் பிரதி தவிசாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், மட்டக்களப்பிலுள்ள வியாழேந்திரன் எப்படி அம்பாறை மாவட்டத்திற்கு வர முடியும் என்றும் சில அரசியல்வாதிகள் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது வினவியிருந்தார்கள்.
இவர்களை பார்த்து நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ஹிஸ்புல்லாவையும், அசாத் சாலியையும், ரிசாட் பதியுதீனையும் பதவி விலகுமாறு கேட்கப்பட்ட போது நீங்கள் 22 பேரும் ஏன் பதவியை துறந்தீர்கள்?
பிரதேச ரீதியாக பார்த்தீர்களா இல்லை, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் என பார்த்து தானே உங்கள் பதவிகளை இராஜினாமா செய்தீர்கள் என கேட்டுள்ளார்.
வடமாகாணம் தமிழர்களின் தாயகம்! கிழக்கு முஸ்லிம்களின் தாயகம் - பிரதி தவிசாளரின் கருத்தை சுட்டிக்காட்டும் எம்.பி -
Reviewed by Author
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment