சிக்காக்கோவில் நடைபெற்ற 10வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஈழத்தமிழர் சார்பாக-அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஆற்றிய உரை
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் கடந்த யூலை மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ் ஆய்வாளராகக் கலந்துகொண்ட மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் பல்வேறு உரைகளை நிகழ்த்தியும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தும் இம்மாநாட்டில் காத்திரமான பங்பளிப்பை வழங்கினார்.
இம்மாநாட்டின் முதல் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32ஆம் ஆண்டு விழாவாகவும்ää சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தின் 50வது ஆண்டுப் பொன்விழாகவும் அமைந்திருந்தன. முதல் நாள் நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற ‘உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம்’
(Global Tamil Hour) (Global Tamil Hour) என்ற ஒரு மணித்தியால நிகழ்வு பொது அமர்வாக இடம்பெற்றது. இதில் ஈழத்தமிழர் சார்பாகக் கலந்துகொண்ட தமிழ் நேசன் அடிகளார் இன்றைய இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாகவும்ää ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் சிறப்புரையாற்றினார். இந்த அமர்வில் உலகெங்கும் இருந்து வருகைதந்திருந்த நான்காயிரத்திற்கும் அதிகமான தமிழ் அறிஞர்கள்ää தமிழ் ஆர்வலர்கள்ää தமிழின உணர்வாளர்கள் கூடியிருந்தனர். இந்த அமர்வில் ஐ.நா.வின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த திருமதி நவநீதம்பிள்ளைää நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமார் மற்றும் தமிழ் நாட்டு பொதுவுடமைக் கட்சியின் தலைவர் தோழர் மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ நேசன் அடிகளார் இங்கு ஆற்றிய உiர் கீழே தரப்படுகிறது:
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
“வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள்கூட்டம் அன்னார்.
உள்ளத்தால் ஒருவரே மற்றுடலினால் பலராய்க் காண்பார்”
என்ற பாவேந்தரின் பா வரிகளுக்கேற்ப இங்கே வெள்ளமெனக் கூடியிருக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களே! தமிழ் கூறும் நல்லுலகெங்கும் இருந்து பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்காக சிக்காக்கோவில் சங்கமமாகியிருக்கும் தமிழ் உறவுகளேää அறிஞர் பெருமக்களேää தமிழ் ஆர்வலர்களே உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம்!
இலங்கை நாட்டினுடைய வன்னி மண்ணின் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு கத்தோலிக்க குருவாக நான் இங்கு வந்திருக்கிறேன். முப்பது ஆண்டுகாலப் போரின் வடுக்களைத் தாங்கிநிற்கும் எனது மக்களின் பிரதிநிதியாக நான் உங்கள்முன் நிற்கின்றேன். இன்றைய இலங்கை நாட்டின் நிலவரம் குறித்துää அங்குள்ள ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து சில சிந்தனைகளை சுருக்கமாக உங்களோடு பகிhந்துகொள்ள நான் விழைகிறேன்.
முப்பது ஆண்டுகாலப் போரின் வடுக்களில் இருந்தும் அதன் உச்சமாகிய முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்தும் இன்னும் ஈழத்தமிழர்கள் மீண்டுவரவில்லை. எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நிகழ்த்தப்பட்ட 30 வருடகால அகிம்சைப் போராட்டம்ää அதைத்தொடர்ந்த 30 வருட கால ஆயுதப்போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்கவில்லைää மனம் உடைந்து போகவில்லை! முள்ளிவாய்க்கால் என்பது எமது உரிமைப்போராட்டத்தின் முடிவு அல்ல. அது இன்னுமொரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றே நாம் கருதுகின்றோம்.
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர்ää அந்த மனிதப் பேரவலம் நடந்தேறி 10 வருடங்கள் கடந்த நிலையில் ஈழத்தமிர்களின் வாழ்வியலில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் கண்ணீர்க் கதைகள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு வீதிகளில் கதறி அழும் தாய்மார்கள் அரசியல் கைதிகளாக பல்லாண்டுகள் வழக்கு விசாரணைகள் இன்றி இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்கள் அவர்கள் எப்போது வருவார்கள்? என ஏங்கி நிற்கும் குடும்ப உறவுகள் தமது சொந்த வாழ்விடங்கள் இலங்கை அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தமது சொந்த மண்ணில் குடியேறக் காத்திருக்கும் தமிழ்க் குடும்பங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள்ää போரின்போது உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்ட அப்பாவிப் பொது மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்திற்காக ஏங்கி நிற்கும் வறுமையுற்ற குடும்பங்கள் விதவைகள் கல்விக்காக ஏங்கி நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள் என ஈழுத்தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்கதையாகத் தொடர்கின்றன.
இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனுக்குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதில் ஈழத்தமிழர்கள் இன்னும் உறுதியோடு இருக்கின்றார்கள்.
மிகப்பெரும் எதிர்பார்ப்போடு இலங்கையில் ‘நல்லாட்சி அரசை’ நாம் அரியணை ஏற்றினோம். இன்றைய ஜனாதிபதியை நாம் மகாத்மா காந்தியாகää மார்ட்டின் லூத்தர் கிங்காகää நெல்சன் மண்டேலாவாகக் கனவு கண்டோம். ஆனால் இன்று எமது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகிப்போய்விட்டன. இன்றைய இலங்கை ஜனாதிபதியின் வார்த்தைகளும் செயற்பாடுகளும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன.
ஒரு நாட்டில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சுமுகமான உறவுநிலை இல்லை என்றால் அது எத்தகைய பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இலங்கை நாடு ஒரு சிறந்த உதாரணம்.
இன்று இலங்கை அரசியலில் ஒரு குழப்பமான நிலையே காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலருக்கு தாம் என்ன பேசுகின்றோம் என்றே புரியவில்லை. பல ஆண்டுகாலப் பாரிய முயற்சியின் பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பின் 19ஆம் திருத்தச்; சட்டம் தேவையில்லை என்றும் மரணதண்டனை அமுலாக்கம் குறித்தும் இன்றைய அரசுத் தலைவர் பேசிவருகின்றார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு முன்நகல் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீறுபூத்த நெருப்பாக இருந்த சமய சமூக இன முறுகல்நிலை ஈஸ்ரர் தாக்குதலைத் தொடர்ந்து பற்றியெரிய ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு சமூகங்களும்ää சமயத்தவர்களும் மற்றவர்களை சந்தேகத்தோடு பார்க்கின்ற புதிய யதார்த்தம் உருவாகியுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக மூர்க்கத்தனமாகச் செயலாற்றிய பௌத்த பேரினவாதம் இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இலங்கையில் வாழும் இஸ்லாமிய சமூகம் இன்று பலவித அசௌகரியங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாதம்ää இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற இன்றைய இலங்கைச் சூழ்நிலையில் தமிழர் பிரச்சினை புறந்தள்ளப்படுகின்ற அல்லது மறக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது.
பல நூறு உயிர்களைக் காவுகொண்ட ஈஸ்ரர் தாக்குதலானது உண்மையில் தடுத்திருக்கப்படவேண்டியதொன்று. இந்தியாவில் இருந்தும் ஏனைய தரப்பினரிடமிருந்தும் அனுப்பப்பட்ட புலனாய்வுத் தகவல்கள்ää எச்சரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டமையின் விளைவே இந்த மிகப்பெரும் மனிதப் பேரவலம். இந்தத் தாக்குதல்களுக்கும் அதன் பாரிய விளைவுகளுக்கும் இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும். ஈஸ்ரர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை நாட்டில் மக்கள் மத்தியில் பயமும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் இன்று ஒரு புதிய அரசியல் தலைமைக்காகக் காத்து நிற்கின்றனர். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டவும்ää போரின் விளைவுகளான பிரச்சினைகளைத் தீர்க்கவும் தம்மால் இயன்ற அளவு பாடுபடுகின்றனர் என்பது உண்மையே. ஆயினும் பெரும்பாலபன தமிழ் மக்கள் இத்தமிழ்த் தலைமைகளில் நம்பிக்கை இழந்து வருகின்றமை கண்கூடு. ஈழுத்தமிழர்கள் ஒரு புதிய சுயநலமற்ற தீர்க்கதரிசனம்மிக்க தலைமைய எதிர்பார்க்கின்றனர். சலுகைகளுக்கு விலைபோகாத, தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டுக்கொடுக்காத, தமிழ்த் தேசிய உணர்வுமிக்க புதிய இளம் தமிழ்த் தலைவர்கள் மேலெழ வேண்டும் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்று உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள தமிழ் இளந்தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மொழிகளைக் கற்று அந்த மொழிகளிலேயே கல்வியையும் கற்கின்றனர். இந்த இளம் தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைமைகளுக்கு அவர்களின் மொழியிலேயே ஈழத்தமிழர் பிரச்சினையின் உண்மையான யதார்த்தத்தை எடுத்துக்கூறவேண்டும்.
அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு ஈழத்தமிழ்ப் பிரச்சினையின் அடிப்படையை, இன்றைய யதார்த்தத்தை எடுத்துக் கூறவேண்டும்.
ஈழத்தமிழரின் விடிவிற்காக சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நிலைகளில் செயலாற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கடந்த காலங்களில் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். ஆயினும் இன்று இந்த அமைப்புக்கள் மத்தியில் பிரிவுகளும் பிளவுகளும் மலிந்துவிட்ட சூழ்நிலையை நாம் கவலையோடு கண்ணோக்குகிறோம். தனித்தனி தீவுகளாகச் செயற்படாமல் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயலாற்றும்போதுதான் இன்னும் அதிக நற்பயன்களை விளைவிக்க முடியும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு”
ஈழம் எமது தாய்நாடு என்றால் இந்தியா எமது தந்தையர் நாடு. தென்னாசியாவில் வல்லாதிக்க சக்தியாக விளங்கும் இந்தியப் பெருநாடு ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில காத்திரமான வகிபாகத்தை ஆற்றமுடியும் என நாம் இன்னும் உறுதியாக நம்புகின்றோம். தனது இந்தத் தார்மீகக் கடமையில் இருந்து இந்தியா விலகி நிற்கக்கூடாது.
எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ் நாட்டுத் தமிழர்கள் குறிப்பாக தமிழின உணர்வாளர்கள் கடந்த காலத்தில்; எமக்காகக் குரல்கொடுத்ததை நாம் நன்றியோடு நினைக்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் குரலை எமக்காக நீங்கள் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அன்புரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம்.
ஈழத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான அரசியல் உரிமைகளை இலங்கையின் எந்த அரசாங்கமும் தந்ததுமில்லைää இனித் தரப்போவதும் இல்லை. இன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் நலன் சார்ந்து சுயநலத்தோடுதான் சிந்தித்து செயலாற்றுகின்றன. அன்றும் இன்றும் இதுதான் யதார்த்தம். இந்நிலையில் எமது உரிமைகளை நாம்தான் போராடிப் பெறவேண்டும். ஈழத்தமிழர்கள் தமது உரிமையை வென்றெடுக்க தம்மைத்தாமே ஆழுகின்ற சுயாட்சியைப் பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழ் உறவுகள் சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதுவிடயத்தில் புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பெரும் பங்களிப்பை எதிர்பார்க்கின்றனர். உலகின் பல பகுதிகளில் தமது உரிமைகளை வென்றெடுத்த தேசிய இனங்கள்ää இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இனங்கள் நமக்கு முன்னுதாரணமாகவும்ää உந்து சக்தியாகவும் இருக்கின்றன.
இன்று இந்தப் பூமிப்பந்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழன் சிந்திச் சிதறிக் கிடக்கிறான். “தமிழன் இல்லாத நாடும் இல்லை தமிழனுக்கென்றொரு நாடும் இல்லை”
உலகின் எங்கோ ஒரு இடத்தில் தமிழர்களுக்கு என ஒரு நாடு அமைய வேண்டும். அப்போதுதான் செழுமையும் வளமையும் கொண்ட நமது மொழிää கலைகள்ää இலக்கியங்கள்ää சமயங்கள் பண்பாடுகள் பாதுகாக்கப்படும்ää வளர்க்கப்படும். நீண்ட நெடிய கலை இலக்கிய அரசியல் பண்பாட்டுப் பெருமைகளைக் கொண்ட நமது தமிழ் இனம் உலகின் மற்ற இனங்களைப்போல தமது பண்பாட்டு அடையாளங்களோடுää அரசயல் உரிமைகளோ இந்த உலகில் மிளிர வேண்டுமெனில் இந்த இனத்திற்கு என ஒரு தனி அரசு அமைய வேண்டும். இது வெறும் கனவு அல்லää காலத்தின் கட்டாயம்! இது இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் யதார்த்தமாக வேண்டும். அது நீண்ட நெடிய பயணமாக இருந்தாலும் அந்தக் கனவை நெஞ்சில் தாங்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!”

Reviewed by Author
on
July 08, 2019
Rating:

No comments:
Post a Comment