2019 உலகக்கோப்பையில் இதுவரை 25 சதங்கள்! முதலிடத்தில் எந்த நாடு? -
உலகக்கோப்பையில் நேற்றுடன் 41 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதுவரை இந்தத் தொடரில் மொத்தம் 25 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தொடரின் முதல் பாதியில் மழைக் காரணமாக ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறின.
இதன் காரணமாக சதங்கள் சற்று குறைந்துள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் ஒரு சதம் அடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் 7 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஜோ ரூட் 2 சதங்களும், பேர்ஸ்டோவ் 2 சதங்களும், கேப்டன் மோர்கன், ஜேசன் ராய் மற்றும் பட்லர் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.
இந்திய அணி தரப்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் ரோஹித் ஷர்மா 4 சதங்களும், தவான் ஒரு சதமும் அடித்துள்ளனர்.
இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள்
- இங்கிலாந்து - 7 சதங்கள்
- இந்தியா - 5 சதங்கள்
- அவுஸ்திரேலியா - 4 சதங்கள்
- வங்கதேசம் - 3 சதங்கள்
- நியூசிலாந்து - 2 சதங்கள்
- வெஸ்ட் இண்டீஸ் - 2 சதங்கள்
- இலங்கை - ஒரு சதம்
- பாகிஸ்தான் - ஒரு சதம்
2019 உலகக்கோப்பையில் இதுவரை 25 சதங்கள்! முதலிடத்தில் எந்த நாடு? -
Reviewed by Author
on
July 05, 2019
Rating:

No comments:
Post a Comment