இந்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் தொடர்பில் இந்தியாவின் தலையீடு அவசியம்! -
இலங்கையில் தற்போது இந்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் மற்றும் விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டுமென இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
யாழ்ப்பாணம் - நல்லூரில் இந்துமா மன்றத்தில் இன்று இந்து அமைப்புக்கள் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை இந்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீச்சரம் ஆலய நுழைவு வீதியில் அமைக்கப்பட்ட வளைவு கத்தோலிக்கர்களால் அகற்றப்பட்டமைக்கு இதன்போது கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த வளைவை மீள அமைப்பதற்கு பிரதேச சபை தடையாக இருப்பதற்கு கண்டனம் வெளியிடப்பட்டதுடன், வளைவை மீள அமைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருக்கேதீச்சரம் ஆலய சீரமைப்பு பணிகளுக்கு இந்தியா நிதி உதவி வழங்கியுள்ளது.
இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் இந்தியா அரசு தலையீடு செய்யவேண்டும் என்றும் இந்து அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இந்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் தொடர்பில் இந்தியாவின் தலையீடு அவசியம்! -
Reviewed by Author
on
July 21, 2019
Rating:

No comments:
Post a Comment