அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து அணி -
இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாம் அரையிறுதி போட்டியானது பர்மிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் திணற ஆரம்பித்தார். 49 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.
43 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டார்க் வீசிய பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
மற்றொரு புறம் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஜேசன் ராய், 85 ரன்கள் எடுத்த போது, அவுஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் வீசிய 20வது ஓவரின் 4வது பந்தை எதிர்க்கொண்டார்.
அந்த பந்து ராய் அருகே சென்றது. இதை விக்கெட் கீப்பர் கேரி கேட்ச் பிடிக்க, அம்பயரிடம் அவுட் கேட்டகப்பட்டது. இதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட குமார் தர்மசேனா, அவுட் என கையை உயர்த்தினார். பின் ரீப்ளேவில் பார்த்த போது பந்து ராயின் பேட்டிலோ அல்லது கிளவுசிலோ படாதாதது தெளிவாக தெரிந்தது.
அதன்பிறகு நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ஜோ ரூட் 49 ரன்களும், மோர்கன் 45 ரன்களும் எடுத்து எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதன்மூலம் 14ம் திகதியன்று நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற உள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து அணி -
Reviewed by Author
on
July 12, 2019
Rating:
Reviewed by Author
on
July 12, 2019
Rating:


No comments:
Post a Comment