முழுக்க சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானம்.. வெற்றிகர முதல் பயணம்! -
சீனாவின் ஒக்சாய் எனும் விமான நிறுவனம் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மீற்றர் உயரம் வரை செல்லக்கூடியது.
பகலில் சூரிய ஒளியில் 8 மணிநேரம் மின்சக்தியை சேமித்துக் கொள்ளும் இந்த விமானம், இரவு மிதமான வேகத்தில் 12 மணி நேரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது.
‘மோஸி 2’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆளில்லா விமானம், கடந்த 27ஆம் திகதி சீனாவின் சேஜியாங்கில் உள்ள டெக்கிங் விமான நிலையத்தில், தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது.
இந்த விமானம் பேரிடர் மீட்பு, உளவு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதன் பயன்பாடுகளை அதிகரிக்க 5ஜி சேவை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒக்சாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானம்.. வெற்றிகர முதல் பயணம்! -
Reviewed by Author
on
July 31, 2019
Rating:

No comments:
Post a Comment