பிணையில் வெளியில் வரும் நளினி! -
பிணை ஆவணங்களை, வேலூர் சிறை நிர்வாகத்திடம் இன்று வழங்கிய பின்னரே குறித்த விடயத்தை நளினியின் சட்டத்தரணி புகழேந்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.
இந்நிலையில் தன் மகள் ஹரித்ரா திருமணத்திற்காக நளினி பிணையில் வருகைத் தரவுள்ளதுடன், அவரது மகளும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நளினியின் மகள் திருமணத்திற்கு 6 மாதங்கள் பிணை கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத காலம் மாத்திரம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிணையில் வெளியில் வரும் நளினி! -
Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment