ஆஸ்துமா நோயிலிருந்து சரும நோய்கள் வரை குணப்படுத்த இந்த காயை சாப்பிடுங்க
இந்த காய் கரோண்டா என்றும் விஞ்ஞான ரீதியாக கரிசா காரண்டாஸ் என்றும் அழைக்கப்படுகிறது,
மலாயாவில் கெரெண்டா என்ற பெயரிலும், வங்காள திராட்சை வத்தல் அல்லது தென்னிந்தியாவில் கலாக்காய் என்றும் அழைக்கப்படுகின்றது.
அதுமட்டுமின்றி தாய்லாந்தில் நம்டெங், காரம்பா, கராண்டா, கராண்டா மற்றும் பிலிப்பைன்ஸில் பெருங்கிலா போன்ற வெவ்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.
இந்த கலாக்காய் மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் எல்லாம் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இந்த கலாக்காயை நிறைய மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கலாக்காய் ஆஸ்துமா நோயிலிருந்து சரும நோய்கள் வரை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
அந்தவகையில் தற்போது இதன் மருத்துவப்பயன்கள் பற்றி பார்ப்போம்.

- உலர வைத்த கலாக்காய்பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சீரணமின்மை, வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.
- 10 மில்லி கிராம் அளவு இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் காய்ச்சல் தானாக குறைந்து விடும்.
- கலாக்காயில் உள்ள மக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ட்ரைப்டோஃபோன் போன்றவை செரோடோனின் சுரப்பிற்கு உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த மூளையின் திறனும் அதிகரிக்க்கிறது.
- கலாக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 15-20 மில்லி லிட்டர் ஜூஸ் குடித்து வந்தால் இதய தசைகளின் வலிமை அதிகரித்து விடும்.
- கலாக்காய் இயற்கையாகவே உடலில் உள்ள அழற்சியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட வலிமை உள்ளது.
- அஸ்காரிஸ், ஈறுகளில் இரத்தம் வடிதல், உட்புற உறுப்புகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது
முக்கிய குறிப்பு
- கலாக்காயை அதிக அளவிலோ அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தாலோ பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும்.
- ஆண்களின் விந்தணுக்கள் மற்றும் விறைப்புத் தன்மையில் பிரச்னை ஏற்படும்.
- அதிகளவு எடுத்துக் கொள்ளும் போதுமான அசிடிட்டி பிரச்னையை சந்திக்க நேரிடலாம்.
- பழுக்காத பழங்கள் எரிச்சலை ஏற்படுத்தலாம். இரத்த சம்பந்தமான நோய்களை இது மிகவும் பெரிதாக்கும்.
ஆஸ்துமா நோயிலிருந்து சரும நோய்கள் வரை குணப்படுத்த இந்த காயை சாப்பிடுங்க
Reviewed by Author
on
August 13, 2019
Rating:

No comments:
Post a Comment