திருவள்ளுவர் சிலையை தொட்டு வணங்கிய அவுஸ்திரேலிய வீரர்! -
தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் விளையாடும் இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் வருகை தந்துள்ளார்.
நெல்லையில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியை உற்சாகப்படுத்திய வாட்சன், கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து படகு மூலம் திருவள்ளுவா் சிலைக்கு சென்று பாதத்தை தொட்டு வணங்கியுள்ளார். பின்னர் விவேகானந்தா் மண்டபத்துக்கு சென்று சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டுள்ளார்.


திருவள்ளுவர் சிலையை தொட்டு வணங்கிய அவுஸ்திரேலிய வீரர்! -
Reviewed by Author
on
August 13, 2019
Rating:
No comments:
Post a Comment