மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நன்மை கருதியே---மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன்
மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் சில வீரர்கள் எந்த ஒரு உதை பந்தாட்டப் போட்டியிலும் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தது இதற்கான காரணத்தை மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது.
வடக்கு கிழக்கில் உள்ள உதைபந்தாட்ட வீரர்களை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் வடக்கு கிழக்கு பிரிமியர் லீக் உதைபந்தாட்ட அமைப்பு இதற்கு மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் புரண ஆதரவினை வழங்கி வந்தது
மன்னார் மாவட்ட எப்.சி(NPEL) அணியினை நல்ல முறையில் உருவாக்குவதற்காக மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் பாரிய நிதியினை வீரர்களுக்கு செலவிட்டு உழைத்ததில் கடந்த வருடம் மன்னார் எப் சி அணியானது வடக்கு கிழக்கு பிரிமியர் லீக் போட்டியில் நான்காம் இடத்தை பிடித்தது.
ஆனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் போட்டிகள் வீரர்கள் தெரிவு எமக்கு திருப்தி அளிக்கவில்லை அத்துடன் என்பிஈஎல் நிர்வாகத்தினரிடம் சில கேள்விகளை கேட்டிருந்தொம் அதற்கு சரியான பதில்கள் இல்லை அதன் காரணமாக இந்த வரடத்தின் போட்டியில் பங்குபற்றுவது பற்றிய மீள் பரிசீலனை செய்வது என்று மன்னார் உதை பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்திருந்தது அதன்படி எந்த நோக்கத்திற்காக வடக்கு கிழக்கு பிரிமியர் லீக் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை தவற விட்டு வேறு பாதையில் (NPEL)பயணிக்கிறது.
(NPEL)வெறுமனே போட்டிகளை நடாத்தி முடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது உதைபந்தாட்ட வீரர்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அத்துடன் மன்னார் மாவட்டத்தை சார்ந்த எமது வீரர்கள் உதைபந்தாட்டத்தில் மிகத்திறமைசாளிகள் என்பதை அனைவரும் அறிவார்கள் கட்டுக்கோப்பான எமது வீரர்களையும் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தை|யும் சிதைத்து பலவீனப்படுத்தும் நோக்கத்தில் சிலர் எமது அனுமதி இல்லாமல் வீரர்கள் சிலரை ஏலத்தில் தெரிவு செய்துள்ளார்கள் அந்த வீரர்களும் எமது அனுமதி இல்லாமல் பொட்டிகளில் பங்குபற்றி விளையாடியுள்ளார்கள் தொன்று தொட்டு உதைபந்தாட்ட போட்டிகளில் மன்னார் வீரர்களுக்கு என்று தனியான இடம் உள்ளது.
அதனை மேலும் வளர்க்க வேண்டுமே தவிர சீர்குலைக்க அனுமதிக்க இயலாது பல முறை மன்னாரில் போட்டிகளை நடாத்து மாறும் உதைபந்தாட்டப் போட்டிகள் மன்னாரில் நடாத்த முன்வரவில்லை இதை போல பல காரணங்களால் தான் எமது திறமையான வீரர்களின் நன்மை கருதியே அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் வடக்கு கிழக்கு பிரிமியர் லீக் போட்டிகளை வேறு மாவட்டங்களில் நடத்தும் நிர்வாகம் மன்னார் மாவட்டத்தில் நடத்துவதற்கு தயங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Reviewed by Author
on
August 10, 2019
Rating:

No comments:
Post a Comment