மன்னார்-காக்கையன் குளம் முஸ்ஸிம் ம.வி 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2மாடிக் கட்டிடம் அடிக்கல் நாட்டி வைப்பு-
மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் ம.வி பாடசாலைக்கு 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்கு இன்று செவ்வாய்க்கிழமை 03/09/2019 மாலை வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (3) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு , மன்னார் பிரதேச சபை தவிசாளர் என்.முஜாஹிர் அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் , மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர் , பாடசாலை நிருவாகத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (3) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு , மன்னார் பிரதேச சபை தவிசாளர் என்.முஜாஹிர் அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் , மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர் , பாடசாலை நிருவாகத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்-காக்கையன் குளம் முஸ்ஸிம் ம.வி 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2மாடிக் கட்டிடம் அடிக்கல் நாட்டி வைப்பு-
Reviewed by Author
on
September 04, 2019
Rating:

No comments:
Post a Comment