கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன்! பயங்கர ஆயுதங்களுடன் தலைமறைவு -
கனடாவில் ஆபத்தான நபராக தமிழ் இளைஞன் ஒருவர் பட்டியலிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரை ரொரன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர்.
கனடாவில் மிகவும் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள குறித்த நபரை கண்டால் தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.
அவர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை கண்டால் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம். உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுதங்களை மறைத்து எடுத்து சென்றமை, துப்பாக்கியை காட்டியமை, பொது மக்களின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருந்தமை, துப்பாக்கிகளை விடுவித்தமை மற்றும் தடை செய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அவர் தேடப்பட்டு வருகின்றார்.
ஜெய்சன் ஜெயகாந்தன் 5.8 அடி உயரும் கறுப்பு நிற தலைமுடி மற்றும் பலுப்பு நிற கண்களை கொண்டுள்ளார். இடது தோள்பட்டையில் தேவதை உருவம் ஒன்றை பச்சை குத்தியுள்ளார். இடது கையில் வட்டம் போன்ற அடையாளம் உள்ளதாக பொலிஸார் அவரை அடையாளப்படுத்தியுள்ளனர்.
கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன்! பயங்கர ஆயுதங்களுடன் தலைமறைவு -
Reviewed by Author
on
September 04, 2019
Rating:

No comments:
Post a Comment