மன்னார் கவிதாயினி சர்மிலா வினோதினிக்கு இந்தியாவில் படைப்பூக்க விருது
பூவரசி பதிப்பகம் மற்றும் பூவரசி அறக்கட்டளை இணைந்து நடாத்திய பூவரசி விருது விழா-2019
பூவரசி காலை இலக்கிய விருது வழங்கும் விழா சென்னையில் கோயம்பேடு விஜய் பார்க் கோட்டலில் 18.08.2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வில் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு அவர்களை ஊக்குவித்து பெருமைப் படுத்தும் விதமாக விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மூன்று அரங்கமாக நடைபெற்ற நிகழ்வில் ஓவியக் கண்காட்சியும் நூல் வெளியீடும் விருது வழங்கலுமாக நடைபெற்றது.
இந்தியாவில் பல மாவட்டங்களில் இருந்தும் இலங்கையிலும் இருந்தும் ஏனைய சில வெளி நாடுகளிலும் இருந்து பலரும் கலந்துகொண்டார்கள்.
இவ்நிகழ்வில் இலங்கையில் இருந்து சில கலைஞர்களும் இவ்விருதினை பெற்றிருந்தனர்.
இவ்விழாவில் எமது மன்னார் மாவட்டத்தின்
சர்மிலா வினோதினி அவர்களுக்கு படைப்பாளர் எஸ்.பொ "படைப்பூக்க விருது" வழங்கப்பட்டது. இவ் விருதை மேற்குத்தொடர்ச்சிமலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.
இராப்பாடிகளின் நாட்குறிப்பு கவிதை தொகுப்பு
மொட்டப்பனையும் முகமாலைக்காற்றும் சிறுகதை தொகுப்பு நூல்களினை வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளராக செயலாற்றும் சர்மிலா வினோதினி அவர்களுக்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக நாமும் வாழ்த்துகின்றோம்.
தொகுப்பு -கவிஞர் வை.கஜேந்திரன்BA-
மன்னார் கவிதாயினி சர்மிலா வினோதினிக்கு இந்தியாவில் படைப்பூக்க விருது
Reviewed by Author
on
September 05, 2019
Rating:

No comments:
Post a Comment