தமிழர் ஒருவரும் ஜனாதிபதியாகலாம்! வெளியான தகவல் -
இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இல்லை என்பது அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் கூறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி.சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் அல்லது தமிழ் பேசும் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது. மாறாக பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரால்தான் ஜனாதிபதியாக முடியும் என்ற பரவலான கருத்து சமூகத்தில் காணப்படுகின்றது.
இதுகுறித்து ஊடகமொன்று அரச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி.சில்வாவிடம் வினவியிருக்கிறது. இதற்கு பதிலளித்துள்ள அவர்,
“அப்படி எந்தவொரு சந்தர்ப்பமும் இலங்கையின் அரசியலமைப்பில் எழுதப்படவில்லை” என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அதிகமான சந்தர்ப்பங்களில் தமிழர்கள் போட்டியிட்டிருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் ஒருவரும் ஜனாதிபதியாகலாம்! வெளியான தகவல் -
Reviewed by Author
on
September 08, 2019
Rating:

No comments:
Post a Comment