இலங்கையில் மீண்டும் பயங்கர தாக்குல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை! -
இலங்கையில் மீண்டும் எதிர்பாராத நேரத்தில் பயங்கர தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த வாரம் மாவவெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலை உடைக்க தலைமைத்துவம் வழங்கிய மௌலவி கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலுக்கு அமைய இலங்கையில் 9 மாகாணங்களில் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது.
2027ஆம் ஆண்டில் இந்த நாட்டை பிடிக்க சில சக்திகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக இந்த 9 தாக்குதல்களும் மேற்கொள்ளப்படும். அது மாத்திரமின்றி மேலும் பல தாக்குதல்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த தாக்குதலை நிறுத்தி விடலாம் என நான் நினைக்கவில்லை. ஏன் என்றால், அவர்கள் நாட்டிற்குள் கும்பலமாக உள்ளனர். அதற்கமைய எதிர்பாராத இரண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அது சஹ்ரானின் தாக்குதல் போன்றிருக்கும்.
அப்படி தாக்குதல் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பல பில்லியன் டொலர் பணம் நாட்டிற்குள் வந்துள்ளது. அந்த பணம் எப்படி வந்ததென தெரியவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் பயங்கர தாக்குல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை! -
Reviewed by Author
on
September 08, 2019
Rating:

No comments:
Post a Comment