மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை எட்ட ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்....பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி.ஞானப்பிரகாசம்.
மன்னார் மாவட்டத்தில் 36 வருடங்களாக இயங்கி வரும் மன்னார் மாவட்ட
பிரஜைகள் குழு பொது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பல சவால்களை எதிர் நோக்கி வருகின்றது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்களாக செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழவின் தலைவர்
அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் பொதுக் கூட்டம் நேற்று முன்
தினம் புதன் கிழமை (25.09.2019) மன்னார் கலையருவி மண்டபத்தில் இதன்
தலைவர் அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இங்கு அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் தனது உரையில் தொடர்ந்து
தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் பிரiஐகள் குழு 36 வருடங்களாக
தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது.
இலங்கையிலே மன்னார் மாவட்டத்தில் மட்டும்தான் பிரiஐகள் குழு தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிய வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் பொது மக்களுக்கு பல பிரச்சனைகள் தலைதூக்கி
வருகின்றபோதும் இவற்றில் சிலவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகள் கொண்டு அவைகளுக்கான தீர்வைப் பெற்று வருகின்றோம்.
இருந்தும் மூன்று முக்கிய பிரச்சனைகளுக்கு தொடர்ந்து நாம் பொது
மக்களுக்காக முகம் கொடுக்க வேண்டிய நிலையில் தொடர்ந்து இருக்கின்றோம்.
அதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம். அடுத்து மன்னார்
மாவட்டத்தில் அடிக்கடி மின்சார தடை, மற்றையது மன்னார் மாவட்ட கால்நடைக்கு மேய்ச்சல் நிலம் இல்லாது கால் நடை வளர்ப்போர் வவுனியா மற்றும் கிளிநொச்சி பக்கம் தங்கள் கால்நடையை மேயச்சலுக்காக கொண்டு செல்லும் நிலை. இவைகளை தீர்வுக்கு கொண்டு வருவதில் எமது ஆளுநர் சபை கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அனைவரும் ஒன்றுபட்டவர்களாக செயல்பட வேண்டிய அவசியமாக இருக்கின்றது.
எமது பிரஜைகள் குழு எந்தவித அரசியலும் கலக்காத சகல மதத் தலைவர்களையும் மக்களையும் கொண்ட ஒரு அமைப்பாக இருப்பதால் எமது நாட்டில் மட்டுமல்ல உலக அரங்கிலும் எமக்கென ஒரு இடம் காணப்படுகின்றது.
ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்களாக எமது மக்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகளை இனம் கண்டு அவைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றார்.

Reviewed by Author
on
September 28, 2019
Rating:
No comments:
Post a Comment