சைவ சமய எழுச்சி மாநாடு...மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில்....இன்று
சைவ சமய எழுச்சி மாநாடு...மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில்.... 28 .9 .2019 சனிக்கிழமை மாபெரும். சைவ சமய எழுச்சி மாநாடு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வாக மன்னார் பாலத்திலிருந்து நந்திக்கொடி எழுச்சியுடன். நடராஜப் பெருமானை சுமந்தவாறுஎழுச்சி பேரணி ஆனது ஆரம்பமாகி மன்னார் நகர மண்டபத்தை வந்தடைந்து.
காலை 09.30 மனிக்கு மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி விசேட உரைகள் இடம்பெற்று பகல் 12 30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவு பெறவும் இந்நிகழ்வில் நல்லை ஆதீன குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சின்மியா மிஷன் சுவாமிகள் தென் கைலை ஆதீன சுவாமிகள் தமிழருவி த.சிவகுமாரன் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் செந்தமிழ்ச் சொல்லருவி லலீசன் போன்றவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து இந்துக்குருமார்கள் ஆலய நிர்வாகிகள் இந்து நிறுவன பிரதிநிதிகள் இந்து மக்கள் அனைவரையும் மற்றும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களையும். தரம் 08 ற்கு மேற்பட்ட மாணவர்களையும் இந்த. நிகழ்வில்கலந்து கொள்ள காலை 08மணிக்கு முன்பாக வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
இந்து மக்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் அந்தந்த கலாசார உடையுடன் வருகை தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி
அனைவரும் ஒன்று திரள்வோம்எழுச்சியை ஏற்படுத்துவோம்.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்...."
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை
சைவ சமய எழுச்சி மாநாடு...மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில்....இன்று
Reviewed by Author
on
September 28, 2019
Rating:

No comments:
Post a Comment