புதிய அரசமைப்பு நிறைவேறாமல் போனதற்கு மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டமே காரணம்!
மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல இழக்கப்பட்டு புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பம் இல்லாது போனது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் அமைப்பு தடைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்துக்கள் குறித்துக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் பிரதான கட்சிகளின் தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை நாடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.
புதிய அரசமைப்பு நிறைவேறாமல் போனதற்கு மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டமே காரணம்!
Reviewed by Author
on
September 02, 2019
Rating:

No comments:
Post a Comment