மன்னார் தாயிலான் குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தான கட்டுமான பணிக்காக அடிக்கல்
மன்னார் தாயிலான் குடியிருப்பில் வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தான கட்டுமான பணிக்காக அடிக்கல் வைக்கப்பட்டது.
கடந்த 60 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தாயிலான்குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு அம்பாளின் அருள் ஆசியுடன் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு. ச.செல்லையா அவர்களின் தலைமையில் எழுத்தூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஹீ விஜய பாபு குருக்களின் விஷேட பூஜை வழிபாடுகளுடன் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபையின் இணைச் செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் பிருந்தாவனநாதன், நடேசன், வைத்திய கலாநிதி. கதிர்காமநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அல்ஹாச் S.H.M. முஜாகிர், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ராசிக் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்களான சிவஹீ ஐங்கரன் சர்மா மற்றும் யுஸ்ரின் மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி துணைத் தலைவரும் சட்டத்தரணியுமான டினேசன் அவர்களும் தாயிலான்குடியிருப்பு உச்சிப்பிள்ளையார் ஆலயம், ஹீ முருகன் ஆலயம், கப்பலேந்திமாதா ஆலய உறுப்பினர்கள் மற்றும் ஆலய மக்களின் பங்கு பற்றுதலுடன் சிறப்புற இடம்பெற்றது.
இவ் மூலஸ்தான கட்டுமான பணிக்காக பல லட்சம் ரூபாய் பணம் தேவைப் படுகின்ற போதிலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிவமோகன் ஆகியோர் தலா 3 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளனர் மேலும் பல லட்சம் ரூபாய் தேவை படுகின்ற போதிலும் வருகைதந்து இருந்தவர்கள் சில உதவிகள் செய்வதாக கூறி இருந்தனர் இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பல உதவிகளை கேட்டு நிற்கின்றார்கள் தாங்கள் தங்கள் நன்கொடைகளை வழங்க விரும்பினால் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கணக்கு வைப்பு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்
Account number (020020091267)
மேலதிக விபரங்களுக்கு ஆலய கட்டுமான குழுவை தொடர்பு கொள்ளவும் +94770763308 தீபன்
+94770879703 விஜயகுமார்
+94779903146 குகன்
நன்றி.

மன்னார் தாயிலான் குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தான கட்டுமான பணிக்காக அடிக்கல்
Reviewed by Author
on
September 14, 2019
Rating:

No comments:
Post a Comment